கருத்திட்டத் திட்டமிடலுக்கான சர்வதேச நிபுணர்களின் கூட்டம் பிஸ்கெக்கில் நடைபெற்றது. (iஐர் குடியரசு)

“ஆசியா மற்றும் பசிபிக்கில் ஐசிஎச் பாதுகாப்புக்கான திட்டமிடல் பற்றிய நிபுணர்களின் 2015 கூட்டமானது”கிர்கிஸ் தலைநகரான பிஸ்கெக்கில் 2015 டிசம்பர் 8 முதல் 9 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டமானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஐசிஎச்சின்; பாதுகாப்பிற்;கான திட்டமிடல் ஆய்வாக ஐசிஎச்சினது கருத்திட்டச் செயற்பாடாக நடைபெற்றது. இதில் அவதானிப்பாளர்கள் உள்ளடங்கலாக ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள 11 நாடுகளிலிருந்து 17 நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

ஐஆர்சிஐ அதன் ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்களின் பிரதான செயற்பாட்டின் ஓரங்கமாகக் கருத்திட்டத் திட்டமிடலினை 2013 நிதியாண்டிலிருந்து நடத்திவருகின்றது. 2015 நிதியாண்டின் ஆரம்பத்தில் இந்த நிபுணர்கள் கூட்டத்திற்கான தயாரிப்பாக நடப்பு நிலவரங்களை மதிப்பிடுவதற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள 17 நாடுகளில் ஐசிஎச் பாதுகாப்பு ஆய்வு பற்றிய முறைமை வாய்ந்த ஆவணக் கணிப்பீட்டினை சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களுடன் சேர்ந்து ஐஆர்சிஐ மேற்கொண்டுள்ளது.  சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வின் மூலம் கணிப்பீடானது ஆய்வுப் பரப்புக்கள் உள்ளடங்கலாக பிராந்தியத்தில் எதிர்கால ஆய்வு நடவடிக்கைளிலுள்ள சவால்கள் மற்றும் வலியுறுத்தப்படவேண்டிய ஐசிஎச் பாங்குகள் ஆகியவற்றினை அடையாளம் கண்டுள்ளது.

இந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிப்பீட்டில் பங்குபற்றிய ஆய்வாளர்கள் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஐசிஎச் பாதுகாப்பிற்காக ஆய்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதிலுள்ள பிரச்சினைகளையும் சவால்களையும் பற்றி மேலும் கலந்துரையாடுவதற்காக பிஸ்கெக்கில் கூடினர். ஆவணக் கணிப்பீடுகளின் போக்குகள் போன்ற தலைப்புக்கள் வருகின்ற வருடங்களில் தொடரும். கணிப்பீட்டினால் சேகரிக்கப்பட்ட புதிய தரவுகளைப் பிரதிபலிக்கின்ற ஐஆர்சிஐ ஆனது ஆய்வுத் தரவுத் தளத்தினது செம்மைப்படுத்தல்களும் நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ளன.

மத்திய ஆசியாவிலே சர்வதேசக் கூட்டம் ஒன்றினை ஐஆர்சிஐ  கூட்டியது இதுவே முதற் தடவையாகும். பிஸ்கெக்கிலுள்ள கலாசார ஆய்வு மையம் வழங்கிய தாராளமான ஒத்துழைப்பினால் ஐஆர்சிஐ  பயனடைந்துள்ளது. தஐpகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுக்கும் ஐஆர்சிஐயினது வலையமைப்பினை விஸ்தரிப்பதற்குக் கூட்டம் பங்களிப்பினை வழங்கியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

 

சிகீகி கொடமாவினைத் (ஐஆர்சிஐ) தொடர்புகொள்க.