ஐஆர்சிஐ கருத்திட்டங்களின் அமுல்படுத்தலின் மேம்பாட்டிற்காக ஆய்வாளர்கள் மீகொங் பிராந்தியத்தில் மூன்று நாடுகளுக்கு விஐயம் செய்துள்ளனர்.

 

நிறுவனங்களுடன் ஒத்துழைப்புமிகு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் “பாரிய மீகொங் பிராந்தியத்தில் புலப்படாத கலாசாரப் பாரம்பரியங்கள் தொடர்பான சட்ட முறைமைகளின் ஆய்வு” உள்ளடங்கலாக பல கருத்திட்டங்களுக்குப் பங்களிப்பு வழங்கும் தகவல்களைச் சேகரிப்பதற்காகவும் சூசன் மெக்இன்டெய்ர் டெம்வோய் (தொல்பொருளியல் மற்றும் மரபுரிமை முகாமைத்துவத் தீர்வுகள்) மற்றும் கெடீ ஓ ஓ ரூகே (கெடீ ஓ ரூகே கன்சல்டிங் பி ஃ எல்) ஆகிய இரண்டு ஆய்வாளர்களை மியன்மாருக்கும் லாவோசுக்கும் தாய்லாந்திற்கும் ஐஆர்சிஐ அனுப்பியுள்ளது. இந்த நாடுகளிற்கு ஐஆர்சிஐயினால் ஏற்கனவே அனுப்பப்பட்ட வினாக்கொத்தின் அடிப்படையில் ஐஆர்சிஐ பாதுகாப்பிற்கான தற்போதைய சட்ட நிலைமைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக மூன்று நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கும் மரபுரிமையுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அரசாங்கப் பிரிவுகளுக்கும் இவர்கள் நவம்பர் 2- 10ன் போது விஐயம் செய்தனர். நேர்காணப்பட்ட நிறுவனங்களுள் உள்ளடங்குபவை: மியன்மாரிலே கலாசார அமைச்சு, யங்கொன் மரபுரிமை நம்பிக்கை நிதியம், யுனெஸ்கோ கலாசாரத்திற்கான தேசிய கருத்திட்ட அலுவலகம், லாவோசிலே லாவோ சமூக அறிவியல் அகடமி,லாவோஸ் தேசிய பல்கலைக்கழகம், தகவல் அமைச்சு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை, யுனெஸ்கோ இணைப்பு அலுவலகம், தாய்லாந்தில், அரச சபை, கலாசார அமைச்சு.