IRCI-யின் நான்காவது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

25 செப்டம்பர் 2015 அன்று ஸகாய் நகரில் உள்ள அகோரா ரிஜென்ஸியில் வைத்து IRCI-யின் நான்காவது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகக் குழுவில் உள்ள 8 உறுப்பினர்களுடன் கூடுதலாக, வெளியுறவுத் துறை அமைச்சகம், பெலாவ் தேசிய அருங்காட்சியகம், பெலாவ் மற்றும் சீனாவில் (CRIHAP) உள்ள ICH-ஐ சார்ந்த பிற C2 மையங்கள் மற்றும் கொரிய குடியரசு (ICHCAP) ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தின் முக்கிய செயற்பட்டியல் பின்வருமாறு:

1. நிதியாண்டு 2014-ல் நடைபெற்ற செயல்பாடுகளை அறிக்கையிடல், நிதியாண்டு 2014-க்கான நிதியறிக்கையின் ஒப்புதல், மற்றும் நிதியாண்டு 2015-க்கான வரவு-செலவு திட்டத்தை மீண்டும் உறுதி செய்தல்;

2. அடுத்த இடைக்கால திட்டத்தின் (நிதியாண்டு 2016-2020) கலந்துரையாடல் மற்றும் ஒப்புதல்;

3. நிதியாண்டு 2016-க்கான செயல் திட்டம் மற்றும் வரவு-செலவு திட்டத்தின் கலந்துரையாடல் மற்றும் ஒப்புதல்.

 

 இலையுதிர் காலத்தில் நடைபெறும் திருவிழாவில் மக்கள் ஃப்யூட்டன்-டைக்கோ மிதவைகளை (சிறு திருமனை) சுமந்து வரும் ஊர்வலத்தினை காண்பதற்காக அடுத்த நாள் மொசோவாசிமன் ஷ்ரைன் செல்வதற்காக ஒரு கலாச்சார சுற்றுலா நடத்தப்பட்டது.