அருவ கலாச்சாரப் பாரம்பரியம் என்ற களத்திலான வகைப்பாடு 2-ன் கீழ் உள்ள மையங்களுக்கான மூன்றாவது ஆண்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் IRCI பங்கேற்றது.

6-8 ஜூலை 2015 அன்று சீனாவின் கெய்ஜோ மாகாணத்தில் உள்ள குய்யங்கில் வைத்து நடைபெற்ற அருவ கலாச்சாரப் பாரம்பரியம் என்ற களத்திலான வகைப்பாடு 2-ன் கீழ் உள்ள மையங்களுக்கான மூன்றாவது ஆண்டுக் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில்  IRCI பங்கேற்றது. வகைப்பாடு 2 (C2)-ன் கீழ் உள்ள மையங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும், மையங்களுக்கும் UNESCOவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் இந்தக் கூட்டம் UNESCOவின் ICH பிரிவால் நடத்தப்படும். இந்த ஆண்டின் கூட்டமானது சீன C2 மையத்தால் (CRIHAP) நடத்தப்பட்டது மற்றும் இதில் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஐரோப்பா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள மையத்தில் இருந்து 6 பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். IRCI-யிலிருந்து இயக்குனர் ஜெனரல் அகியோ அராடா (Akio Arata), மற்றும் இணை ஊழியர் ஷிகேகி கொடாமா (Shigeaki Kodama) ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு, UNESCOவால் நியமிக்கப்படும் வெளிப்புற மதிப்பாய்வு பற்றிய ஓர் அமர்வை நடத்தினர். பிற C2 மையங்களும் தங்களது நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளை முன்மொழிந்தனர். கலந்துரையாடலின் நிறைவில், பங்கேற்பாளர்கள் மையங்களுக்கிடையேயான மேலதிக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர்.