வியட்நாமின் இனப்பண்பாட்டியல் அருங்காட்சியகத்தின் பிரதிநிதிகள் ஒரு மரியாதை நிமித்தமான வருகையை IRCI-க்கு மேற்கொண்டனர்

வியட்நாமின் இனப்பண்பாட்டியல் அருங்காட்சியகத்தின் இயக்குனர் டாக்டர். வோ க்வாங் ட்ராங் (Dr. Vo Quang Trong), மற்றும் ஆராய்ச்சியாளர் செல்வி. ஃபாம் தி துய் சங், (Ms. Pham Thi Thuy Chung) ஆகியோர் 30 ஜூன் 2015 அன்று ஒரு மரியாதை நிமித்தமான வருகையை IRCI-க்கு மேற்கொண்டனர். IRCI மற்றும் பிரதிநிதிகள் தங்களின் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, இந்த இரு அமைப்புகளுக்கு இடையேயான எதிர்கால ஒத்துழைப்பின் வாய்ப்பைப் பற்றிக் கலந்துரையாடினர்.