கலாச்சாரப் பாரம்பரிம் பற்றிய டோக்கியோ கருத்தரங்கில் IRCI பங்கேற்றது.

20 மே 2015 அன்று டோக்கியோ தேசிய அருங்காட்சியகம், ஹெய்சிகனில் வைத்து நடைபெற்ற கலாச்சாரப் பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கில் IRCI-ன் இயக்குனர் ஜெனரல் அகியோ அராடா (Akio Arata) குழுக் கலந்துரையாடலில் பங்கேற்றார். ஸகாய் நகரமும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் தேசிய அமைப்புகளும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

 

இந்தக் கருத்தரங்கில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இதில் IRCI-ன் தகவல் பலகங்கள் முகப்பறையில் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.