"சமூகத்தால் இட்டுச்செல்லப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு கருவியாக அருவ கலாச்சாரப் பாரம்பரியத்தைக் ஆவணப்படுத்துதல் பற்றிய தீவிர பணி அமர்வை" IRCI நடத்தியது.

நிதியாண்டு 2011-லிருந்து, "சமூகத்தால் இட்டுச்செல்லப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு கருவியாக ICH-ஐ ஆவணப்படுத்துதல்" என்ற தலைப்பிலான திட்டத்தை IRCI நடத்தி வருகிறது. மேற்கண்ட திட்டத்தின் இறுதி ஆண்டு நிறைவு செயல்பாடாக, 16 மார்ச் 2015-ல் டோக்கியோவில் வைத்து ஒரு தீவிர பணி அமர்வு நடத்தப்பட்டது. தங்களின் செயல் திட்டம் மற்றும் காணொளிப் பதிவுகளைப் பூர்த்தி செய்யவேண்டி இருந்த கிழக்குத் திமோரில் உள்ள நிபுணர்கள் உள்ளிட்டோரையும் மற்றும் இலங்கை, ஜப்பானில் இருந்து அரசு அதிகாரிகள் மற்றும் ICH பயிற்சியாளர்களையும் இணைத்து மொத்தம் 9 பங்கேற்பாளர்களை IRCI அழைத்திருந்தது.

திட்டத்தின் இறுதி அறிக்கையின் டிஜிட்டல் பதிப்பானது இந்தத் திட்டத்தை வழிநடத்திச் செல்லும் லெய்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர். மெட்ஜே போஸ்ட்மா (Dr. Metje Postma) மற்றும் பிற நிபுணர்களால் திருத்தப்பட்டு வருகிறது.

  

(1 அக். 2014-ல் நடைபெற்ற 3-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வைத்து அங்கீகரிக்கப்பட்ட பணி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடத்தப்பட்டது.)