திமோர்-லெஸ்டேவிலிருந்து வந்திருந்த அரசாங்க அலுவலர்கள் ஜப்பானில் உள்ள புதிரான பண்பாட்டு மரபுகள் குறித்த ஆய்வுப் பயணத்தில் கலந்து கொண்டனர்

திமோர்-லெஸ்டே அரசாங்கம்  மற்றும் ஜகார்த்தாவிலுள்ள UNESCO அலுவலகம் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற ஒரு கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக IRCI, திமோர்-லெஸ்டேவின் அரசாங்க அலுவலகர்களுக்கு ஜப்பானின் புதிரான பண்பாட்டு மரபுகள் குறித்த ஓர் ஆய்வுப் பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்தப் பணித்திட்டம் IRCI –இன் துவக்க இடைக்கால நிகழ்ச்சி நிரலில்(2013-2015) சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ICH –ஐப் பாதுகாப்பதற்கான IRCI –இன் செயல்பாட்டு செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாலும், மற்றும் இந்த விஷயத்தின் அவசரத்தன்மையாலும், இதற்கு  2013 IRCI –இன் ஆட்சிக்குழு சந்திப்பில் ஒப்புதலளிக்கப்பட்டது. அந்த அலுவலர்கள் அக்டோபர் 22 –இலிருந்து 26 வரை ஐந்து நாட்கள் ஜப்பானைப் பார்வையிட வருகை தந்தார்கள்.

வாழும் கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மற்றும் கைவினைப்பணிகள் போன்றவற்றின் மூலம் பலவிதமான முயற்சிகள் தேவைப்படுகின்றன. திமோர்-லெஸ்டேவின் ICH இனிதான் கண்டறியப்பட வேண்டும், மற்றும் அதன் சூழ்நிலைகள் இன்னும் புரிந்து கொள்ளப்பட்டு, ஆராயப்படவில்லை. அதோடு, அருங்காட்சியகங்கள் மற்றும் மற்ற உட்கட்டமைப்புகள் இன்னமும் நிறுவப்படவில்லை. அதன்படி, நாட்டுப்புற மற்றும் கிராமிய சமுதாயங்கள் மூலம் ICH –ஐ  எடுத்துச்செல்ல, வெளிப்படுத்த மற்றும் விளம்பரப்படுத்துவதற்கான பல்வேறு நல்ல செயல்பாடுகளைத் தேர்ந்தெடுத்தல், மற்றும் உற்றுநோக்கல் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்தல் (ICH பாதுகாப்பு அமைப்புகள், அருங்காட்சியக நிர்வாகிகள், மற்றும் மண்டல அதிகாரிகளுடன் அனுப்பீட்டு அமைப்புகள் மற்றும் மற்ற தலைப்புகள் குறித்து) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த  முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வுப்பயணத்தை மேற்கொண்டவர்கள், டோக்கியோ தேசிய அருங்காட்சியகம்; டோக்கியோவிலுள்ள கலாச்சார சொத்துக்களுக்கான தேசிய ஆய்வு  நிறுவனம்; மற்றும் தேசிய காட்சியரங்கம் ஆகியவற்றில் நடத்தப்படும் தேசிய அளவிலான முயற்சிகளைக் காண்பதற்காக பார்வையிட்டனர். பின்னர், ஓகாவிலுள்ள சமுதாய அருங்காட்சியங்கள் (நமஹகெ அருங்காட்சியகம் மற்றும் ஓகாஷின்சான் நாட்டுப் புறவியல் அருங்காட்சியகம்), ஓகாநமஹகெ பண்டிகையின் பிறப்பிடமான அகிதா அரச உறைவிடம்; யூகி-த்சூமூகி  எனப்படும் ஒருகை வினைப்பணியை மக்களுக்குக் கற்றுக்கொடுத்து, அதைப்  பரப்புவதற்காக இபாராகி அரச உறைவிடத்தில் யூகி நகரம் மேற்கொள்ளும் முயற்சிகள்; மற்றும் கைவினை சந்தைப்படுத்துதல் மற்றும் டொசிகி  அரச உறைவிடத்தில் உள்ள மஷிகோ சமூகத்தின்  நிலப்பரப்புகள் ஆகியவற்றைப் பற்றி பங்கேற்பாளர்கள் அறிந்து கொண்டனர்.

திமோர்-லெஸ்டேவில்  ICH –ஐப் பாதுகாப்பதிலுள்ள சிக்கல்கள் மற்றும்  தீர்வுகள் தொடர்பாக முதல் மற்றும் கடைசி நாட்களில் முழுமையான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களின் முடிவுகள் தொகுக்கப்பட்டன.

விரிவான தகவல்கள் மார்ச் 2014 –இல் ஓர் அறிக்கையாக பதிப்பிக்கப்பட்டன.