”ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ICH –ஐப் பாதுகாப்பதற்கான ஆய்வை வரைபடப்படுத்துதல்” தொடர்பாக IRCI ஒரு சர்வதேச நிபுணர்கள் கூட்டத்தை நடத்தியது.

2ஆம் IRCI நிர்வாகக் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்ட பணித் திட்டத்தின் அடிப்படையில் ”ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ICH –ஐப் பாதுகாப்பதற்கான ஆய்வை வரைபடப்படுத்துதல்” என்று தலைப்பிடப்பட்ட பணித்திட்டத்தை IRCI நடத்தி வருகிறது. ICH –ஐப் பாதுகாப்பதற்கு மேற்கூறிய பிராந்தியத்தில் நிகழ்த்தப்படும் ஆய்வினை பரிசோதித்துப் பார்ப்பதற்கும், முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆழமான விவாதங்கள் நடத்துவதற்கும் உதவுவதே இப்பணித்திட்டத்தின் நோக்கமாகும்.

2013 ஆம் நிதியாண்டிற்கான பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக, தாய்லாந்தின் பாங்காக் நகரிலுள்ள UNESCO அலுவலகத்தில் IRCI ஒரு சர்வதேச நிபுணர்கள் கூட்டத்தை 2014 பிப்ரவரி 19-20 தேதிகளில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், நிபுணர்கள் ICH -ஐப் பாதுகாப்பதன் தற்போதைய நிலை பற்றி அறிக்கையளித்தனர், இந்தத் துறையில் ஓர் ஆய்வினை நிகழ்த்துவதிலுள்ள  முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டறிந்தனர் மற்றும் இந்தப் பணித்திட்டத்தின் எதிர்காலத் திசைகளுக்கான பரிந்துரைகளை வழங்கினர்.

2014 நிதியாண்டில், இந்த சந்திப்பில் கண்டறியப்பட்ட பிரச்சனைகள் மற்றும் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தப் பணித்திட்டத்தை IRCI தொடர்கிறது. பணித்திட்டத்தின் முடிவுகள் இந்த வலைதளத்தில் அறிக்கையளிக்கப்படும்.