“ICH வீடியோ ஆவணமாக்கலுக்கான சமூகத்தின் இளம் திரைப்பட உருவாக்குனர்களுக்கான 2ஆம் பயிற்சிப் பட்டறையை” IRCI நடத்தியது.

“ICH வீடியோ ஆவணமாக்கலுக்கான சமூகத்தின் இளம் திரைப்பட உருவாக்குனர்களுக்கான 2ஆம் பயிற்சிப் பட்டறையை” டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-6 தேதிகளில் IRCI நடத்தியது. ஆசிய நாடுகளிலிருந்து 10 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சிப் பட்டறை, பிப்ரவரி 2013 –இல் சுரூகாவில் நடத்தப்பட்ட “புதிரான பண்பாட்டு மரபு ஆவணமாக்கலை சமூகத்தின் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஒரு கருவியாக்கும் பயிற்சிப் பட்டறையின்” ஒரு தொடர்ச்சியாகும்.

இந்தப் பட்டறையில் ICH –ஐப் பாதுகாப்பது மற்றும் ஆவணப்படுத்துவது குறித்த நிபுணர்களின் விரிவுரைகளோடு, சுரூகாவில் 2013 –இல் நடைபெற்ற பட்டறையில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் அவரவரது சொந்த சமூகங்களில் ICH குறித்து உருவாக்கிய ஒலி-ஒளி ஆவணங்களின் அறிமுகங்கள் மற்றும் மதிப்பீடுகளும் இடம்பெற்றன.

IRCI இப்பணித்திட்டத்தின் இறுதி அறிக்கையை பிப்ரவரி 2015 -இல் வெளியிடவிருக்கிறது.

(இந்த பணித்திட்டமானது 2013 அக்டோபரில் நடைபெற்ற 2ஆம் நிர்வாகக் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது)