2 –வது IRCI–இன் ஆட்சிக்குழு சந்திப்பு

இரண்டாவது  ஆட்சிக்குழு சந்திப்பு 21 அக்டோபர் 2013 –இல்  கியோதோவில் நடத்தப்பட்டது. 9 வாரிய உறுப்பினர்களில், UNESCO –இலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் மற்றும்  UNESCO –இன்  இரண்டு உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  கூடுதலாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்தும் பார்வையாளர்களாக இணைந்து கொண்டனர். IRCI –இன் இடைக்கால நிகழ்ச்சிநிரல், பணித்திட்டங்கள், நிதிநிலைத் திட்டம் ஆகியவை பின்வரும் தலைப்புகளுடன் முக்கியமாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதலளிக்கப்பட்டன;

ஆலோசனைக்குழுவின் மறுசீரமைப்பு

செரிவான அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பு அதிகரிக்கப்பட்டு இந்தியா மற்றும் ஃபிஜி போன்ற ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் விரிவான பகுதிகளிலுள்ள நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

செயல்பாடுகள் மற்றும்  நிதிநிலை அறிக்கைகள் குறித்த அறிக்கை

IRCI –இன் துவக்கத்திலிருந்து 2012 நிதியாண்டின் முடிவுவரையிலான செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதலளிக்கப்பட்டன.

IRCI –இன் இடைக்கால நிகழ்ச்சிநிரல்

UNESCO –இன் இடைக்கால திட்டமிடலுடன் முழுமையாக இணங்கும் ஒருபுதிய  இடைக்கால நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப்பட்டது.

2013-2014 நிதியாண்டுக்கான வேலைத் திட்டம் மற்றும் நிதிநிலைத்திட்டம்

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் ICH –ஐப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சி, மற்றும் மேற்கூறிய பிராந்தியத்தில்  ICH –ஐப் பாதுகாப்பது குறித்த வரைபட ஆய்வுகள் ஆகியவை அடுத்த இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளில் நடத்தப்படவேண்டிய பணித்திட்டங்களின் முன்னுரிமைப் பகுதிகளாக தீர்மானிக்கப்பட்டன. இந்த இரண்டு  முன்னுரிமைப் பகுதிகளிலும் முடிவுகளை எட்டுவதற்காக ஏழு பணித்திட்டங்கள் நிறுவப்படும்.